News

Friday, 19 August 2022 01:42 PM , by: T. Vigneshwaran

15 Crores collected

மாவட்டம் நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் 31 பேர் இணைந்து நடத்திய மொய்விருந்து விழாவில் ஒரே நாளில் 15 கோடி ரூபாய் மொய் வசூலாகி இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது. இதனால் அந்த விழாதாரர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் ஆனி மாதம் தொடங்கி ஆவணி மாதம் வரையில் மொய்விருந்து விழாக்கள் நடைபெறுவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மொய் விருந்து விழாக்கள் கலை இழந்து காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆனி மாதம் இறுதி முதல் புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் மொய்விருந்து விழாக்கள் களைக்கட்ட தொடங்கியது.

தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான மொய் விருந்து விழாக்கள் நிறைவடையும் நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் 31 பேர் இணைந்து ஒரே பொது இடத்தில் மொய் விருந்து விழா வைத்துள்ளனர்.

இந்த விழாவில் 31 பேருக்கும் சேர்த்து ஒரே நாளில் சுமார் 15 கோடி ரூபாய் வரையில் மொய் வசூல் நடைபெற்றுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இதில் அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் ரூ.2.50 கோடி மொய் வசூல் ஆகியுள்ளது.

மேலும் படிக்க:

3 லட்சம் வரை விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கு மத்திய அரசு

Subsidy: விவசாயிகள் ஏக்கருக்கு 9000 ரூபாய் மானியமாகப் பெற முடியும்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)