கொரோனா பெரும் தொற்று காலத்தில் மருத்துவ கொள்ளையை கட்டுப்படுத்தும் பொருட்டு பிபிஇ கிட் உடை, கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட 15 அத்தியாவசிய பொருட்களின் விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஜூன் 14-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பேரிடரிலிருந்து மக்களை காக்க தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
அதிக விலைக்கு விற்கும் மருத்துவ பொருட்கள்
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் கிருமிநாசினி, முகக்கவசம், பல்ஸ் ஆக்சிமீட்டர், பிபிஇ கிட் உடை, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தேவை மக்களிடையே அதிகரித்துள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலை பயன்படுத்தி கொண்டு கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பன்மடங்கு அதிகமாக விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு விலை நிர்ணயம்
இந்நிலையில் கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட 15 பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து அதற்கான விலையையும் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி ,
-
இரண்டு அடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க் விலை ரூ.3
-
மூன்று அடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க் விலை ரூ.4.50
-
கிருமிநாசினி 200 மி.லி - ரூ.110
-
N95 முகக் கவசம் - ரூ.22
-
கையுறை - ரூ.15
-
ஆக்சிஜன் மாஸ்க் - ரூ.54
-
பிபிஇ கிட் உடை - ரூ.273
-
ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சரிபார்க்கும் பல்ஸ் ஆக்சிமீட்டர் - ரூ. 1,500
-
ஒரு முறை பயன்படுத்தப்படும் ஏப்ரானின் அதிகபட்ச விலை ரூ.12,
-
அறுவை சிகிச்சை நிபுணர்கள் அணியும் கவுனின் அதிகபட்ச விலை ரூ.65 என தமிழக அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.