News

Tuesday, 03 November 2020 04:27 PM , by: Daisy Rose Mary

ஊட்டச்சத்து பாதுகாப்பை உருவாக்கும் நடவடிக்கையாக 15 மாநிலங்களில் , ரேஷன் கடைகள் வாயிலாக செறிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் 

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் ஊட்டச்சத்து பாதுகாப்பை உருவாக்கும் நடவடிக்கையாக, ரேஷன் கடைகள் வாயிலாக செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் மத்திய அரசின் பரிசோதனை திட்டத்தை, உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயல்படுத்துகிறது. 2019-20ம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்கு இந்த பரிசோதனைத் திட்டத்தை ரூ.174.6 கோடி செலவில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை தலா ஒரு மாவட்டத்தில் அமல்படுத்த 15 மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆந்திர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலா ஒரு மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கும் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கடந்த 31.10.2020-ல் நடத்திய ஆய்வு கூட்டத்தில், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

112 மாவட்டங்களில் தடைமுறை 

இதையடுத்து உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் தலைமையில் 2.11.2020 அன்று நடந்த கூட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாடு சேவைகள் மற்றும் மதிய உணவு திட்டத்தின் கீழ் 2021-2022ம் ஆண்டிலிருந்து செறிவூட்டப்பட்ட அரிசியை நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகிக்கும் வகையில் விரிவான திட்டம் தயாரிக்க வேண்டும் என இந்திய உணவு கழகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் 112 மாவட்டங்களில், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பதில் கவனம் செலுத்தப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க...

அடுத்த 3 நாட்களில் எந்த எந்த மாவட்டங்களில் மழை இருக்கும் - லிஸ்ட் உள்ளே !!

இயற்கை முறையில் முந்திரி சாகுபடி - அசத்தும் கடலூர் விவசாயி ராமராஜன்!!

வெறும் ரூ.87க்கு வீடு வாங்கலாம்! இங்கில்லை... ஆனால் எங்கு தெரியுமா?

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)