அடுக்குமாடி குடியிருப்புகளில் மாத பராமரிப்பு கட்டணமாக 7,500க்கு மேல் வசூல் செய்தால் அந்த தொகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இன்று பெரும்பாலான நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும் பதிவுசெய்யப்பட்ட வீட்டு வசதி சங்கம் அல்லது குடியிருப்போர் நலச் சங்கம் என்ற அமைப்பினை அமைத்து குடியிருப்புகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொள்கின்றனர்.
மாத பராமரிப்பு கட்டணமாக பெரு நகரங்களில் 8000க்கு மேல் வசூல் செய்கிறார்கள். அரசானது 5000 ரூபாய்க்கு மேல் மாத பராமரிப்பு கட்டணம் வசூல் செய்வார்கள் எனில் 18% GST செலுத்த வேண்டும் என அரசு கூறி இருந்தது.
தற்போது இதில் மாற்றம் கொண்டு வந்துள்ளது, அதன்படி 7500- க்கு மேல் மாத பராமரிப்பு கட்டணம் செலுத்துபவர்கள் 18% GST செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி வரிகள் தொடர்பான தமிழ்நாடு பிரிவு அதிகார ஆணையம் (டிஎன்ஏஏஆர்) தெரிவித்துள்ளது.
டிஎன்ஏஏஆர் அளித்த விளக்கத்தில் பராமரிப்பு கட்டணம் முழுவதற்கும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது ஒருவர் மாத பராமரிப்பு கட்டணம் 8000 செலுத்துகிறார் எனில் ஜிஎஸ்டி 8000 க்கும் செலுத்த வேண்டும். 7500 மேல் எனில் வெறும் 500 ரூபாய்க்கு ஜிஎஸ்டி செலுத்தினால் போதும் என்று எண்ணுவதுண்டு.அது தவறு 8000 மேல் எனில் முழுவதற்கும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். ஆனால்,
பலரும் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட தொகைக்கு (7500) அதிகமான தொகைக்கு (8000-7500=500) அதாவது 500 ரூபாய்க்கு மட்டும் ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
Anitha Jegadeesan
Krishi Jagran