தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என பரவிய தகவல் பொய் என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணைகள் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இந்த ஆண்டுக்கான இறுதி தேர்வு நடைபெறாது என்று செய்தி பரவியது.
மேலும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு வரை மட்டுமே ஆண்டுத்தேர்வு நடைபெறும் எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை முழு ஆண்டுத் தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது.
அதனால் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6-ம் தேதி முதல் மே 30-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. 11-ம் வகுப்புக்கு மே 9-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்புக்கு மே 5-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழுஆண்டுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
கோடை வெயிலைக் கொளுத்திவிட- தினமும் 4 புதினா இலைகள்!
லட்சம் ரூபாயை எட்டிய பஞ்சு விலை- ஜவுளித்துறை முடங்கும் அபாயம்!