News

Thursday, 05 May 2022 09:30 PM , by: Elavarse Sivakumar

தமிழகம் முழுவதும் அக்னிவெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், பல மாவட்டங்களில் சதம் அடித்து மக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. அக்னி வெயில் எனப்படும் இந்தக் கத்திரி வெயில் காலத்தில், பகல்வேளையில் மக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் இளநீர், தர்பூசணி பழக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் காரணமாக, வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வெயிலின் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இந்தக்கூட்டத்தில், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வர அனுமதிப்பது என முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தேர்வு இல்லாத நாட்களில் 1- 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை எனவும் வெயிலின் தாக்கம் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

ரத்தத்தில் சர்க்கரைக் கட்டுப்படுப்படுத்தும் வெண்டைக்காய் வாட்டர்!

குறைந்த முதலீடு- 3 மடங்கு லாபம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)