News

Friday, 03 December 2021 03:32 PM , by: T. Vigneshwaran

KR Periyakaruppan Member of the Tamil Nadu

அனைத்து கிராம அண்ணா மருமர்ச்சி திட்டத்தில் ரூ.1200 கோடியில் கிராம ஊராட்சியில் அடிப்படை வசதி திட்டத்தை விரைவாக செயல்படுத்திட அதிகாரிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் உத்தரவு வழங்கியுள்ளார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துரையின் மாநில அளவிலான ஆய்வுகூட்டம் சென்னையில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நடந்தது. இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளர் அமுதா,இயக்குனர் பிரவீன் நாயர்,கூடுதல் இயக்குனர்கள், மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த மழைநீர் ஊரக பகுதிகளின் நீரை ஆதரங்களான குளங்கள்,ஏரிகள் மற்றும் கால்வாய்களை சீரமைத்து பாதுகாத்திட வேண்டும்.

ஊரக பகுதிகளின் அடிப்படை வசதிகளான குடிநீர்,தெருவிளக்குகள், சாலைகள் பள்ளி கட்டிடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை ஏற்படுத்துவது,ஊர்மக்களுக்கான வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் பணிகளைமேற்கொள்ளுதல், சுற்றுப்புற தூய்மையை பராமரித்தல், தனி நபர் சுகாதாரம் பேணுதல் போன்ற பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும்.

2021-22 முதல் 2025-26 வரையான 5 ஆண்டுகளில் கிராமங்களை முழுமையான வளர்ச்சியடைந்த கிராமங்களாக மாற்றுவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை படிப்படியாக ஏற்படுத்திட உருவாக்கப்பட்டுள்ள அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 நடப்பாண்டில் ரூ.1200 கோடி மதிப்பீட்டில், 2505 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்திட உள்ளது. இத்திட்டத்தை செயப்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகளை மாவட்ட அளவிலான அலுவலர்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும்  தனிநபர் அல்லது சமுதாய பணிகள் எடுக்கப்பட்டு தொடர்ச்சியாக மக்களுக்கு பணிகள் வழங்க அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பேர்கொள்ளப்படும் அனைத்து பொருட்கூறு பணிகளும் விரைந்து செயல்படுத்த வேண்டும். பிரதம மந்திரி கிராம குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்டு வரும் அனைத்து வீடுகளையும் விரைந்து முடிக்க வேண்டும். மேலும், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், ஜல் ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம், ஆகிய திட்டங்களில் எடுக்கப்பட்டு முன்னேற்றத்திலுள்ள அனைத்து பணிகளையும் இந்த நிதியாண்டு இறுதிக்குள் முடித்திட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க:

ஓமிக்ரான் அச்சுறுத்தல்! தமிழக பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

தனி விவசாய பட்ஜெட் தயாரிப்பில் மாநில அரசு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)