தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் நாளை சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை
கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலுார், திருச்சி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும்.
கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தர்மபுரி, ஈரோடு, கரூர், தஞ்சாவூர், அரியலுார், கடலுார், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
1.08.22
நாளை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கடலுார், அரியலுார், தஞ்சாவூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கன மழை
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...