விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரு மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் நீண்ட காலம் காத்திருந்த விளையாட்டு வீரர்களின் எதிர்பார்ப்பு அவர்களை வந்து சேர்ந்துள்ளது.
சட்டசபையில் அறிவிப்பு
விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரு மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டசபையில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
ரூ.6,000
இதன் அடிப்படையில், ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான பரிந்துரையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் அனுப்பி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளரின் முன்மொழிவை பரீசிலித்து, நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
வரவேற்பு
இவ்வாறு அதில் அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!