இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2014ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (திருத்தம்) சட்டப்பூர்வமானது மற்றும் செல்லும் என அறிவித்துள்ளது. இருப்பினும் சில மாறுதல்கள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
2014 பென்சன் திட்டம் (2014 Pension Scheme)
ஊழியர்களின் 2014 ஆம ஆண்டின் ஓய்வூதிய (திருத்தம்) திட்டத்தை கேரளா, ராஜஸ்தான் மாநில அரசுகள் ரத்து செய்தன. ஆனால் டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை எதிர்த்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் மத்திய அரசு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தன.
இந்நிலையில் நேற்று 2014 ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (திருத்தம்) சட்டப்பூர்வமானது மற்றும் செல்லுபடியாகும் என உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது.
மேலும் இப்பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் சேர விருப்பத்தைப் பயன்படுத்தாத ஊழியர்களுக்கு, திட்டத்தில் இணைய மேலும் 6 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த உத்தரவானது பல ஊழியர்களுக்கு ஒரு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
SBI வங்கியின் மெகா திட்டம்: வெறும் ரூ.500 முதலீட்டில் கைநிறைய லாபம்!
பழைய பென்சன் திட்டம் முதல் அகவிலைப்படி வரை: தமிழ்நாடு பென்சனர்கள் கோரிக்கை!