இன்று அட்சய திருதியை நன்னாள். இந்த நாளில் மக்கள் தங்கள் வீடுகளில் பூஜை செய்தும் புதிய நகை வாங்கியும் நாளை கொண்டாடுவர். பழங்கள், இனிப்பு, பலகாரம், பால், உப்பு, தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வைத்து பூஜை செய்து வழிபடுவர். மேலும் காலம் காலமாக அட்சய திருதியை நாளில் நகை வாங்குவதை ஒரு நம்பிக்கையான கலாச்சாரமாக மக்கள் கடை பிடித்து வருகின்றனர். இந்நாளில் நகை வாங்கினால் வீட்டில் செல்வம் சேரும் என்பது தமிழர்களின் பாரம்பரிய நம்பிக்கை மற்றும் கலாச்சாரமாகும்.
அட்சய திருதியை நாளையொட்டி அணைத்து நகை கடைகளிலும் சிறப்பு தள்ளுபடி, சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்தே இன்னலுக்கான சிறப்பு தள்ளுபடி, சலுகைகள் தொடர்பான விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.பெண்கள், ஆண்கள், குழந்தைகள், அனைவரையும் கவரும் வண்ணம் புதிய புதிய மாடல்களில், டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொதுவாகவே நகை கடைகள் பார்க்க அழகாக இருக்கும், மற்றும் சிறப்பு நாளான இன்று மேலும் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் மின் விளக்குகள், பூக்கள் கொண்டு கடைகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் காலை 6 மணிக்கே கடைகளை திறக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் வழக்கமான நாட்களை விட அட்சய திருதியை நன் நாளான இன்று 4 மடங்கு வியாபாரம் அதிகரிக்க நகை வியாபாரிகள் இலக்கு நியமித்துள்ளார். பெண்களை கவரும் வண்ணம் அதிகமான மாடல்கள், டிசைன்களில் லைட் வெயிட், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆறாம், நெக்லஸ், டாலர், பிரேஸ்லட், செயின், மோதிரம், வளையல், மேலும் பல நகைகள் புது புது டிசைன்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ணம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன..
அட்சய திருதியை நன்னாளில் மக்கள் தங்கள் வீடுகளில் பால் மற்றும் உப்பு வாங்குவது மிகவும் சிறப்பானது.அனைவரும் இந்த நன்னாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துக்கள்........