News

Thursday, 31 December 2020 06:13 PM , by: Daisy Rose Mary

Credit : Halal watch world news

நாளை முதல் பிறக்கிறது நம்பிக்கை தரும் புத்தாண்டு-2021, கொரோனா தொற்று, பொதுமுடக்கம் போன்ற பல்வேறு காணரங்கால் பணப் பிரச்சினையை ஏற்படுத்திய ஆண்டாக 2020 இருந்தது. வங்கிகளுக்கு அலைய வேண்டிய தேவையும் குறைவாகவே இருந்தது. அடுத்த ஆண்டிலாவது இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

வரும் 2021-ம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்காது என்று இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திட்டமிட்டு பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள். ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள பட்டியலின் படி, 2021-ம் ஆண்டில் 40 நாளுக்கு மேல் வங்கிகளுக்கு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.

2021ம் ஆண்டின் வங்கி விடுமுறைப் பட்டியல்

  • ஜனவரி 26 - குடியரசு தினம்

  • மார்ச் 11 - சிவராத்திரி

  • மார்ச் 29 - ஹோலி பண்டிகை

  • ஏப்ரல் 1 - கணக்குகள் மூடல்

  • ஏப்ரல் 2 - புனித வெள்ளி

  • ஏப்ரல் 14 - அம்பேத்கர் ஜெயந்தி

  • ஏப்ரல் 25 - மஹாவீர் ஜெயந்தி

  • மே 13 - ரம்ஜான்

  • ஜூலை 20 - பக்ரித்

  • ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம்

  • ஆகஸ்ட் 19 - முஹரம் பண்டிகை

  • ஆகஸ்ட் 30 - ஜன்மாஷ்டமி

  • செப்டம்பர் 10 - விநாயகர் சதுர்த்தி

  • அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி

  • அக்டோபர் 15 - தசரா பண்டிகை

  • நவம்பர் 4 - தீபாவளி

  • நவம்பர் 19 - குரு நானக் ஜெயந்தி

  • டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ்

மாநில விடுமுறைகள் மற்றும் மதம் சார்ந்த பண்டிகைகளுக்கு விடுக்கப்படும் விடுமுறைகளும் இதில் அடங்கும். இது போக, ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க....

ஒற்றுமையுடன் உழைத்திடுவோம் : தமிழக முதல்வர் புத்தாண்டு வாழ்த்து!!

விவசாயிகள் போரட்டம் : மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!!

ATMல் பணம் எடுக்கப்போறீங்களா? தோல்வியுறும் பரிவர்த்தனைக்கு அபராதம்- வாடிக்கையாளர்களே உஷார்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)