நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 January, 2022 2:46 PM IST
2022 Digital Budget Filing, View Through Digital, App Introduced

இந்த ஆண்டு, இந்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை மொபைலில் நேரலையில் பார்க்கலாம். நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் நேரலையில் பார்க்கலாம். அதற்கு செய்ய வேண்டியது சின்ன விஷயம் மட்டும் தான். என்ன செய்ய வேண்டும், என்பதை கீழே காணுங்கள்.

இதற்காக ஒரு ஆப் அறிமுகமாகி உள்ளது. இது குறித்து மக்களவை (Parliament of India) சபாநாயகர் ஓம் பிர்லா தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த பயன்பாட்டில் பல முக்கியமான அம்சங்கள் உள்ளன, அகவே மக்கள் பயனடைவார்கள் என நம்பப்படுகிறது.

டிஜிட்டல் பார்லிமென்ட் அதாவது டிஜிட்டல் சன்சத் ஆப் தொடக்கம் (Digital Parliament means the launch of the Digital Sunset App)

சபநாயகர், ஓம் பிர்லா தனது ட்விட்டர் பதிவில், “குடியரசின் 73 ஆண்டுகால பயணத்தில் நமது நாடாளுமன்ற அமைப்புகள் தொடர்ந்து செழித்து வளர்கின்றன. நமது இறையாண்மையுள்ள நாடாளுமன்றம் குடிமக்களை சட்டமியற்றும் முறையுடன் இணைக்க பல முயற்சிகளை எடுத்திருக்கிறது. தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள், இனி 'டிஜிட்டல் சன்சத்' ஆப் ('Digital Sansad' app) அதாவது செயலி மூலம், கைப்பேசியிலும் பார்க்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.
பெரும்பாலான மக்களால் தொலைகாட்சியில் பார்ப்பது சாத்தியமல்ல. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கையுடன் பின்ணி பிணைந்திருப்பது, கைபேசியாகும். அவ்வாறு இருக்க மக்கள், இதில் காண்பதே எளிதாகும்.

அனைத்து பட்ஜெட் விவாதங்களும், இச் செயலியில் பெறலாம் (All budget discussions are available on this app)

'டிஜிட்டல் சன்சத்' செயலியில், பார்லிமென்டின் இரு அவைகளின் அன்றாட அலுவல்கள், அவைகளின் வாதங்கள் பற்றிய தகவல்கள், அவையில் உறுப்பினர்கள் தாக்கல் செய்யும் பிரதிகள், தகவல்கள் என அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று மக்களவை சபாநாயகர் தெரிவித்தார்.

1947 முதல் இப்போது வரை பட்ஜெட் மீதான விவாதங்களின் விவரமும், இந்த செயலியில் ('Digital Sansad' app) வழங்கப்படும். இந்த செயலியைப் பதிவிறக்குவதன் மூலம், மக்கள் தங்கள் போன் திரையில் 2022 பட்ஜெட்டை நேரடியாகப் பார்த்திடலாம். ஏனேனில், இந்த ஏனைய மக்கள் பட்ஜெட் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த ஆப் அறிமுகத்திற்கான அவசியம் என்ன? (What is the requirement for this app launch?)

அரசின் கொள்கை முடிவுகளை மக்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துவது நாடாளுமன்றத்தின் பொறுப்பு என்றாலும், பொது நலனுக்காக உறுதியளிக்கும் பொறுப்பும் இருப்பது குறிப்பிடதக்கது. அதே நேரத்தில் அரசின் பணிகளைப் பற்றிய தகவல்களை தெரிந்து வைத்திருப்பது, ஒரு பொறுப்பான குடிமகனின் அடையாளம் என்று சபாநாயகர் கூறினார்.

பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் (The budget will be tabled on February 1)

நாடாளுமன்றத்தின் விவாதங்கள் முதல் வரவிருக்கும் பட்ஜெட் (Budget 2022) வரை அனைத்து தகவல்களும் இதில் கிடைக்கும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்வதை நேரலையிலும், நீங்கள் பார்க்கலாம்.

பட்ஜெட்டுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பார்லிமென்ட் செயலியின் உதவியுடன், பொது பட்ஜெட்டை மக்கள் நேரடியாகப் பார்க்கவும். டிஜிட்டல் இந்தியாவின் சகாப்தத்தில் கொண்டு வரப்பட்ட இந்த செயலி ஒரு முக்கியமான படியாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

இந்த செயலியின் உதவியுடன் மக்களுக்கு தங்கள் பிரதிநிதிகளின் வாதம், அதற்காக எழும்பும் ஆதரவு மற்றும் மறுப்பு என அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளவும்.

மேலும் படிக்க:

SBI வங்கி: ஆன்லைனில் KCC கார்டு-க்கு விண்ணப்பிக்கலாம்: வழி இதோ!

ரேஷன் கடைகளில் தானியங்கள் விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவு!

English Summary: 2022 Digital Budget Filing, View Through Digital, App Introduced
Published on: 28 January 2022, 02:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now