கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்னையில் வாழும் வெளியூர்வாசிகள், பண்டிகை காலங்களின்போது சொந்த கிராமங்களுக்கு சென்று வருவது வழக்கம். ஆகையால், இன்று ஆயுதபூஜையும், நாளை விஜயதசமியும் உள்ளது.
வரும் சனிகிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால், 4 நாட்கள் விடுமுறை நாட்கள் வரவுள்ளது. இதனால், சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த கிராமங்களுக்கு நேற்று இரவு புறப்பட்டனர். இந்த காரணத்தால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிக அளவில் மக்கள் கூட்டத்தை காணமுடிந்தது.
இதுபோன்ற சூழ்நிலையில், ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு 2.43 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார இறுதி நாட்கள் என்று நான்கு நாட்கள் விடுமுறை இருப்பதால் சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களது ஊர்களுக்கு நேற்று புறப்பட்டனர். மக்கள் பயணம் செய்யும் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் 5,422 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், நேற்று ஒரே நாளில் மட்டும் 2,43,900 பேர் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு பயணம் செய்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
ஊராட்சி மற்றும் ஒன்றிய தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது தி.மு.க
2 வயது குழந்தைக்கும் தடுப்பூசி போட அனுமதி அளித்தது மத்திய அரசு!