MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வானது விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதையும், வளமான இந்தியாவின் வளர்ச்சிக்கு வேளாண் பங்களிப்பினை உறுதி செய்வதையும் முதன்மை நோக்கமாக கொண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கிரிஷி ஜாக்ரன் முன்னெடுப்பில் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் இன்று, மகாராஷ்டிரா மாநிலத்தில் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
இன்று மகாராஷ்டிரா மாநிலம் சட்டாரா பகுதியில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தில் (KVK-borgaon) நடைப்பெற்ற MFOI சம்ரித் கிஷான் உட்சாவ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண் வல்லுநர்கள் வருமானத்தை அதிகரிப்பது பற்றிய நுண்ணறிவை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
மில்லினியர் விவசாயிகள் கௌரவிப்பு:
இந்த நிகழ்வில் முக்கிய நிகழ்வாக முற்போக்கு மில்லினியர் விவசாயிகளான சந்தோஷ் கல்போர், சச்சின் கோர்படே, சோம்நாத் கமத்தே, மற்றும் யுவராஜ் ஆனந்த் ஆகியோர் விவசாயத்தில் ஆற்றிய பங்களிப்புகளுக்காக கௌரவிக்கப்பட்டனர்.
முற்போக்கு விவசாயியான ரிஷிகேஷ் தானேவின் வெற்றிக் கதையுடன் இந்த நிகழ்வு தொடங்கியது. பின்னர் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது குறித்த நுண்ணறிவுகளை நிபுணர்கள் பகிர்ந்து கொண்டனர். சட்டாரா படேகானில் உள்ள மத்திய கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் தாவர பாதுகாப்பு உதவி பேராசிரியர் டாக்டர் சூரஜ் விஜய் நலவாடே, ”கரும்பு சாகுபடியில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மைக்கான உத்திகள்” குறித்து உரையாற்றினார். அவரின் பேச்சு, விவசாயிகளுக்கு பொதுவான அச்சுறுத்தல்களுக்கு எதிராக தங்கள் பயிர்களைப் பாதுகாப்பதற்கான நடைமுறை தொடர்பான நுண்ணறிவை வழங்கியதாக விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.
மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட்டின் பண்ணை உபகரணத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஹர்ஷத் சபாலே, டிராக்டர் பராமரிப்பு மற்றும் டிராக்டரில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் குறித்து உரையாற்றினார். மஹிந்திராவின் சமீபத்திய டிராக்டர் மாடல்கள் விவசாயிகளின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டன.
தினை விவசாயம் குறித்து ஆலோசனை:
KVK-Borgaon-ன் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணரான டாக்டர் கல்யம் பாபர், விவசாயிகளின் வருமானத்தை பன்முகப்படுத்தவும், நிலையான விவசாயத்தை மேம்படுத்தவும் தினை விவசாயத்தின் சிறப்பினை எடுத்துரைத்தார். அவரது விரிவான ஆலோசனைகள் விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர்களை ஆராய்வதற்கும், வளர்ந்து வரும் சந்தை தேவைகளுக்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த நுண்ணறிவினைப் பெற்றனர்.
தனுகா அக்ரிடெக் லிமிடெட்டின் விற்பனை நிர்வாகி சதீஷ் வயல், விவசாயிகள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட பயிர் பராமரிப்பு பொருட்கள் பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார். கரும்பு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதில் சர்க்கரை ஆலைகளின் முக்கிய பங்கை அஜிங்க்யதாரா சககாரி சகர் கர்கானா லிமிடெட் தலைவர் யஷ்வந்த் எச் சலுங்கே அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மில்லினியர் விவசாயிகள் தவிர்த்து, சஞ்சய் ஷிண்டே, அன்மோல் போசலே, ரோஹித் பவார் மற்றும் விஜய் ஜாதவ் உள்ளிட்ட 25 சிறந்த விவசாயிகளின் முயற்சிகளை மஹிந்திரா டிராக்டர்ஸ் அங்கீகரித்து, நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தது.
Read more:
இறைச்சிக்கு மாற்றாக தயார் நிலையில் பலாக் கறி: அசத்திய ICAR- IIHR விஞ்ஞானிகள்
பட்டுப் புழு வளர்ப்பு- 3 பயனாளிகளுக்கு ரூ.1.81 கோடி மானியம்! முழு விவரம்