தமிழ்நாடு அரசால் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணாக்கர்களுக்கு ஊக்குவிப்பதற்காகவும் பல்வேறு சலுகைகள் மற்றும் வசதிகளை உருவாக்கி கொடுப்பதற்காகவும் 'நான் முதல்வன்' என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வழியாக, சென்ற மே 28-ம் தேதி நடைபெறற்று முடித்த யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் அடுத்த கட்ட பயிற்சியை மேற்கொள்ள ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது.
இந்த ஊக்கத்தொகையைப் பெற்று பயன்பெற யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள், 'https://www.naanmudhalvan.tn.gov.in' என்ற இணையதளத்தில் இன்று தொடங்கி வரும் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது,
'தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு அதிகம் தேர்வாக வேண்டும் என்று பல முன்முயற்சிகளை நமது அரசு எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக, நான்_முதல்வன் போட்டித்தேர்வுகள் பிரிவு வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊக்கத்தொகைத் திட்டத்தை யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் நம் இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இளைய தமிழகம் உலகை வெல்லட்டும்!' என்று தெரிவித்திருந்தார்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
1, DAF
2, வங்கி கணக்கு விவரம்
செய்தி சுருக்கம்
மே 28-ம் தேதி நடைபெறற்று முடித்த யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் அடுத்த கட்ட பயிற்சியை மேற்கொள்ள ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது. யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள், 'https://www.naanmudhalvan.tn.gov.in' என்ற இணையதளத்தில் இன்று தொடங்கி வரும் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல்களைக் கண்டறிய காவல்துறையின் புதிய ஆப்!
யப்பாடா.. 3 ரக தக்காளியும் கிலோவுக்கு ரூ.80 வரை அதிரடி குறைவு