கஜா (Gaja) புயலடித்து 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் 1,000 பனை விதைகளை (Palm seeds) இளைஞர்கள் விதைத்தனர்.
பனைமரக் காதலர்கள் அமைப்பு:
கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி சுழற்றியடித்த கஜா புயலுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. அதிலும் தென்னை மரங்கள் (Coconut Tree) அதிகளவில் வீழ்ந்தது. எனினும், பனைமரங்கள் அப்படியே நின்றன. இதையடுத்து, பனையின் மகத்துவத்தை அறிந்த கொத்தமங்கலம் பகுதி இளைஞர்கள் (Youngsters) பனைமரக் காதலர்கள் எனும் அமைப்பைத் தொடங்கினர். இந்த அமைப்பில் உள்ள 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கொத்தமங்கலத்தில் உள்ள நீர்நிலைகளின் கரையோரங்களிலும் அவ்வப்போது பனை விதைகளை விதைத்து வருகின்றனர்.
கஜா புயல் 2-ஆம் ஆண்டு:
கஜா புயலடித்த 2-ம் ஆண்டை நினைவு கூறும் விதமாக கொத்தமங்கலம் பெரியகுளம் பகுதியில் இன்று மாலை 1,000 பனை விதைகள் (1000 Palm Tree) விதைக்கப்பட்டன. தொடர்ந்து, ஏராளமான மரக்கன்றுகளும் நடப்பட்டன. இதுகுறித்து அமைப்பின் நிர்வாகி க. பிரபாகரன் கூறியபோது, “கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 10,000 பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. அவற்றில், ஏராளமான விதைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. பனைமரங்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பனைக் காதலர்கள் அமைப்பு, பனை மரங்களை வளர்க்க எடுத்துக் கொண்ட ஆர்வம் நிச்சயம் அபரிமிதமானது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கூட்டுறவு வங்கிகளைப் போல் இனி மாநில வேளாண் வங்கியிலும் விவசாயக் கடன்!
தவணை முறையில் அதிக திறன் கொண்ட மின்மோட்டார்! அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அழைப்பு!