இந்த மாதம் இல்லத்தரசிகளை அதிர்ச்சியடையச் செய்த விவகாரம் என்றால், அது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வுதான்.
ஒரு காலத்தில் 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட சமையல் சிலிண்டர் விலையை 1000 ரூபாயாக உயர்த்தியப் பெருமை மோடி தலைமையிலான பிஜேபி அரசையேச் சேரும். இந்நிலையில் தங்களது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி 3 இலவச சிலிண்டர் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோவா அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் தற்போது இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருடன் எட்டு எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதையடுத்து புதிய அமைச்சரவையின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்த பின்னர் தமது டுவிட்டரில்பிரமோத் சாவந்த் பதிவிட்டுள்ளார். அதில், புதிய நிதியாண்டு முதல், 3 இலவச சிலிண்டர் விநியோக திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
கோவா சட்டசபைத் தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு மூன்று எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. அதனை நிறைவேற்றும் வகையில் கோவா முதலமைச்சர் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதுக் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...