அங்கன்வாடி மையங்களில் வாரம் ஒரு முட்டைக்கு பதில் 3 முட்டைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் கடுமையாக ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிராமப்புற வாழ்வாதாரம் மற்றும் கட்டமைப்பில் சிறப்பு கவனம் செலுத்தவதற்கான மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (DISHA) குழுவின் மாநில அளவிலான நடைபெற்ற இந்த 2வது ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், கிராமப்புற வளர்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். கிராமப்புறங்களில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் நிலை குறித்து முதலமைச்சர் எடுத்துரைத்தார்.
அங்கன்வாடி மையங்களில் 1-2 வயதான குழந்தைகளுக்கு வாரம் 1 முட்டை என்று இருந்தது. தற்போது 3 முட்டைகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் உணவு பாதுகாப்பை உறுதிசெய்ய இலவச அரிசி வழங்குவதால் பட்டினியின்மை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், நியாயவிலைக்கடைகளின் தரத்தை உயர்த்தி வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் படிக்க: