News

Saturday, 28 August 2021 01:54 PM , by: T. Vigneshwaran

Stalin Against Agricultural Laws

மத்திய அரசு விதித்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்வைத்தார். மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்ற தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளா, புதுச்சேரி, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், டெல்லி மேற்குவங்காளத்தைத் தொடர்ந்து தற்போது தமிழத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் முன்வைத்த தீர்மானத்தை  மறுத்து அதிமுக, பா.ஜ.கவினர் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னிச்சையாக ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்திருப்பது கூட்டாச்சிக்கு பொருந்தாது. அதனால் தான் இந்த சட்டங்களை நிராகரிக்க வேண்டியுள்ளது. இந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது தான்.

இந்த நாட்டில் இருந்து விவசாயிகள் எதிர்பார்ப்பது  ஒன்று தான் வியர்வை சிந்தி உழைக்கும் பொருட்களுக்கு  உரிய விலை கிடைக்கும் வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை. குறைந்தபட்ச ஆதாய விலை என்பது குறைந்த பட்சம் வாய் வார்த்தைக்கு  கூட கிடைக்காத சட்டங்கள் தான் இந்த சட்டங்கள் என்றார்.

மேலும் படிக்க:

MK Stalin: இலங்கை தமிழர்களுக்கு இலவச அரிசி,எரிவாயு இணைப்பு!

ரூ.4,000 கொரோனா நிவாரணம் வழங்கும் திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)