சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 14 September, 2022 8:35 PM IST
Tomato price
Tomato price

கோவையில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு கர்நாடகா, ஆந்திரா, பகுதிகளிலிருந்து தக்காளி வருகிறது. இதைத் தவிர கோவை தொண்டாமுத்தூர், மதுக்கரை, நலத்துறை, நாச்சிபாளையம், காளாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பகுதிகளில் இருந்தும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

மார்க்கெட்டுகளுக்கு வரும் இந்த தக்காளியை சில்லறை வியாபாரிகள் வாங்கி கடைகளில் விற்பனை செய்கின்றனர்.

இதனிடையே மார்க்கெட்டுகளில் 25 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி தக்காளி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரூபாய் 450 முதல் 500 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது.

இதனிடையே தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. ஒரு பெட்டி தக்காளி ரூபாய் 900 வரை விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது.

பருவமழையின் காரணமாக தக்காளி வரத்து குறைவாக இருப்பதாகவும் இதனால் தக்காளியின் விலை அதிகரித்துள்ளதாகவும், மேலும் முகூர்த்த மற்றும் பண்டிகை தினங்களால் தக்காளி உள்ளிட்ட காய்கறிக்கு அதிக அளவு தேவை ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், "மழை காரணமாக தக்காளி செடிகளில் பூக்கள் கருகி விழுந்துள்ளன. இதனால் தற்போது தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாகவே தக்காளி ரூ.10 முதல் ரூ.20க்கு விற்பனையாகி வந்தது. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.

சிலர் தக்காளி விவசாயத்தை கைவிட்டதால் தற்போது வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளது. இதனிடையே மீண்டும் தக்காளி பயிர் செய்து அறுவடை செய்யும் வரை இந்த விலையேற்றம் இருக்கும்." என்றனர்.

மேலும் படிக்க

PM கிசான் ஓய்வூதியத்திற்கு மாதம் ரூ 3000 பெறலாம்!

தமிழகத்தில் 253 அரசியல் கட்சிகள் முடக்கம், என்ன காரணம்?

English Summary: 3 times increase in tomato price, what is the reason?
Published on: 14 September 2022, 08:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now