சுகாதாரத்துறை ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த செய்தி சுகாதாரத்துறை ஒப்பந்த பெண்களுக்கான நற்செய்தி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வாருங்கள் விரிவான பதிவை பார்க்கலாம்.
சென்னை சைதாப்பேட்டை பொது மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இதுவரை நிரந்தரமான பெண் ஊழியர்களுக்கு மட்டுமே மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒப்பந்தம் ஊழியர்களுக்கும் 6 மாத மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என்ற அறிவிப்பு ஒப்பந்த ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
அதுமட்டுமின்றி 2448 சுகாதார பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார், மேலும் இதற்கான விரிவான அறிவிப்பிற்கு மக்கள் காத்திருக்கின்றனர். இதுவரை சுகாதார பணியாளர்கள் ரூபாய் 11,000 என்று ஊதியம் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இனி அந்த ஊதியம் 14 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார், அமைச்சர் மா. சுப்பரமணியன்.
விவசாய கடன் வழங்கும் இந்திய வங்கிகள் - ஓர் பார்வை!
மேலும் அவர், 6 மாத மகப்பேறு விடுப்பின் மூலம் 40,000 பெண்கள் பயனடைவர். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணிபுரியும் 4,848 செவிலியர்களின் ஊதியம் ரூ.14,000-யிலிருந்து ரூ.18,000ஆக உயர்த்தப்படுகிறது என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர், 5,971 பேருக்கு ரூ. 32 கோடி செலவில் ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது என்பதையும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் குரங்கு அம்மை போன்ற நோய் பரவல்கள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், மேலும், ஹெல்த் கேர் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ. 3 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் என்பதையும் தெரிவித்தார். தேசிய நல வாழ்வு குழுவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு கொடுக்கப்படும் என்றும் கூறினார்.
கிசான் ரத் செயலி: விளைப்பொருட்களை கொண்டு செல்ல உதவும்
மாணவி சிந்துவுக்கு சிறப்பான சுகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் குத்துச்சண்டை வீரர் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார் எனவும், அவர் குறிப்பிட்டார். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு புணர்வாழ்வு மையம் விரைவில் அமைக்கப்படும். 29 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவம் துவங்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார். தமிழகத்தில் பல் மற்றும் வாய் சுகாதார சேவையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, கூறினார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
மேலும் படிக்க:
Realme Narzo 50-5G: அறிமுக விலை ரூ. 13,999! விவரம் உள்ளே!
TNPSC: கேள்விகள் தவறாக இருந்ததாக குற்றச்சாட்டு, தேர்வாணையம் விளக்கம்