அரசு ஊழியர்களுக்கான ஊதியத்துடன் கூடிய விடுப்பு நாட்களை 300 நாட்களாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அண்மையில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, எப்போது வழங்கப்படும் என மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக மற்றொரு அறிவிப்பை வெளியிட ஆயத்தமாகி வருகிறது மோடி அரசு.
சட்டச் சீர்திருத்தம்
இந்த ஆண்டு முதல் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்களை வரும் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்த மத்திய அரசுத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு அமல்படுத்தப்பட்டால், அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 300 ஆக உயரும்.
தற்போதைய நிலையில் அரசு ஊழியர்கள் 240 நாள் மட்டுமே சம்பள விடுப்பு அல்லது பெறுகின்றனர். புதிய தொழிலாளர் குறியீட்டில், இது 300 ஆக அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.
தொழிலாளர்கள், தொழிலாளர் சங்கம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகளுடன் புதிய தொழிலாளர் குறியீட்டு விதிகளில் மாற்றங்கள் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதில் வேலை நேரம், ஆண்டு விடுமுறை, ஓய்வூதியம், பி.எஃப். உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
மேலும் படிக்க...
ரூ.70000 சம்பளத்தில் வங்கி வேலை- கல்வித்தகுதி பட்டப்படிப்பு!
பொதுத் தேர்விற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு- மாணவர்களுக்கு Happy news!