அரசு பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கும் விழாவில் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை பாலார்பட்டி கிராம மக்கள் வழங்கியுள்ளனர்.
தேனி மாவட்டம் உப்புக்கோட்டை அருகே உள்ள பாலார்பட்டி கிராமத்தில் அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையிலும் பள்ளியின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு பொருட்கள் ஊர் பொதுமக்களின் சார்பாக கல்விச் சீர்வரிசையாக வழங்கப்பட்டது.
சீர்வரிசையில் மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள், பிளாஸ்டிக் இருக்கைகள்,மேஜைகள், மற்றும் எழுதும்பொருட்கள், பள்ளிக்கு தேவையான மின்விசிறி, மின்விளக்கு சாதனங்கள்,பீரோ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஊர்மக்கள் விஷேகங்களுக்கு சீர் கொண்டு செல்வதை போல ஊர்வலமாக எடுத்துச் சென்று பள்ளியின் நிர்வாகத்தினரிடம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க