News

Tuesday, 23 April 2019 11:00 AM

மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் இன்று தொடங்குகிறது. நாடெங்கிலும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடை பெற்று வருகிறது. இம்மாதம் 11 ஆம் தேதி தொடங்கிய தேர்தல், இரண்டு கட்டங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று  மூன்றாம் கட்ட தேர்தல் நடை பெற்று வருகிறது. இதுவரை 187 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்த  உள்ளது. இன்று 13 மாநிலங்களில் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் நடை பெறுகிறது. இன்று  நடைபெற உள்ள 116 தொகுதிகளில் முக்கிய தலைவர்கள் பேட்டியிடுகிறார்கள்.

கேரள (20), குஜராத் (26) , டாமன் & டையூ (1), கோவா (2), போன்ற மாநிலங்களுக்கும், 2 யூனியன் பிரதேசங்களுக்கும் மொத்தமாக தேர்தல் நடை பெற உள்ளது. முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும்,    சசிதரூர் திருவனந்தபுரம் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அதே போன்று பா..க தலைவர் அமித் ஷா போட்டியிடும்  குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுகின்றனர். இன்று கர்நாடகாவில் மீதமுள்ள 14 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.

மகாராஷ்டிராம் (14),  உத்தரப்பிரதேசம் (10), சத்தீஸ்கர் (7), பீகார் (5), அசாம் (4), ஒடிஷா(6), ஜம்மு & காஷ்மீர்(1), மேற்கு வங்கம் (5) போன்ற தொகுதிகளில் தேர்தல் நடை பெறுகிறது. சமாஜவாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  ஆகியோர்கள் போட்டியிடும் தொகுதிகளில் இன்று தேர்தல் நடை  பெறுகிறது. மக்கள் ஆர்வத்துடன் ஜனநாயக முறைப்படி வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)