பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 23 May, 2021 5:54 AM IST
Credit: DTNext

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவருவதைக் கருத்தில்கொண்டு, தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பொதுமக்களின் வசதிக்காக மொத்தம் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பாதிப்பு அதிகரிக்கும் மாநிலம் (State of increasing vulnerability)

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. நாட்டிலேயே நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாநிலமாகத் தமிழகம் தற்போது உள்ளது.

24ம் தேதியுடன் முடிகிறது (Ends with the 24th)

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு வரும் 24-ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது.

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு (Full curfew without relaxations)

இந்நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, தமிழகத்தில் 24-ம் தேதி முதல் ஒருவாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தனியார் மற்றும் அரசு பேருந்துகளுக்கு அனுமதி (Permission for private and government buses)

இதையொட்டி இரண்டு நாட்களுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

4,500 சிறப்பு பேருந்துகள் (4,500 special buses)

தமிழகத்தில் மொத்தம் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 1,500 சிறப்பு பேருந்துகளும் திருச்சி, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையே 3,000 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

கூடுதல் பேருந்துகள் (Extra buses)

பயணிகள் எண்ணிக்கையைப் பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்றி தங்கள் சொந்த ஊருக்குப் பயணம் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரப் பேருந்துகள் (Chennai city buses)

மேலும் கோயம்பேடு மற்றும் தாம்பரத்திலிருந்து மக்கள் பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக சென்னை மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனவே இந்த வாய்ப்பை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க...

கொரோனா ஊரடங்கால் டன் கணக்கில் வீணாகிறது முல்லைப் பூக்கள்!

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு வரும் பூஞ்சை தொற்று! பாதிப்பிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

இனி வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யலாம்: தொற்றை பரிசோதிக்கும் கருவிக்கு ஐ.சி.எம்.ஆர் அனுமதி!!

English Summary: 4500 special buses will be operated for 2 days - Government of Tamil Nadu!
Published on: 23 May 2021, 05:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now