தமிழகத்தில் ரபி பருவம் தொடங்கி உள்ள நிலையில், விவசாயத்திற்கான உரத் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வகையில், வேளாண்மை துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, துணை இயக்குநர் ஷோபா ஆகியோரின் தீவிர நடவடிக்கையால் தமிழகத்துக்கு தேவையான உர ஒதுக்கீடு மத்திய அரசிடம் இருந்து கேட்டு பெறப்பட்டு உள்ளது.
அதைத்தொடர்ந்து, யூரியா உரம் தடையின்றி உரிய காலத்தில் விவசாயிகளுக்கு கிடைத்திட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழிகாட்டுதலின்படி வெளிநாட்டில் இருந்து 45,161 டன் யூரியா உரம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. இந்த யூரியாவை ஏற்றி வந்த கப்பல் நேற்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.
தமிழகத்திற்கு 35000டன் உரம்!
இதில் தமிழ்நாட்டுக்கு 35,561 டன் யூரியா ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்துக்கு மட்டும் 6000 மெட்ரிக் டன் யூரியா உரம் உள் ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளது. இன்று மேலும் ஒரு யூரியா கப்பல் தூத்துக்குடிக்கு வர உள்ளது. எனவே விவசாயிகளுக்கு யூரியா உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த உரங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலமாகவும், தனியார் உரக்கடைகளின் மூலமாகவும் தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு கிடைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி அருகில் உள்ள உரக்கடைகளில் யூரியா உரத்தை தேவையான அளவுக்கு பெற்று பயனடையுறுமாறு வேளாண்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் படிக்க...
12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!!
குறைந்த வாடகையில் விவசாய இயந்திரங்கள் - சூப்பரான திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர்
PM Kisan Update : ரூ.2000 பணம் உங்களுக்கு வந்துவிட்டதா? இல்லையா? உடனடியாக சரிபாருங்கள்!