மாநில அரசுகளுக்கு இரண்டு தவணை வரி பகிர்ந்தளிப்புகளை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்திர பிரதேச மாநிலத்திற்கு 20 ஆயிரத்து 928 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
நிதி ஒதுக்கீடு (Fund Allocation)
தமிழகத்தை பொறுத்தவரை 4,758 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதே போல ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அசாம், பீஹார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா என பல்வேறு மாநிலங்களுக்கும் இந்த வரி பகிர்வு என்பது வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தொகுப்பில் இருந்து கிடைக்க கூடிய வரியிலிருந்து மாநில அரசுகளுக்கான தேவைகள், அவர்களுக்கு என்னென்ன மாதிரியான விஷயங்களுக்காக செலவிடப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கலந்தாலோசிக்கப்படுகிறது.
நிதி கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த வரி பகிர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க
ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் இனி சீனியர் சிட்டிசன்களுக்கு நல்ல காலம் தான்!