பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடும் வகையிலும், தை பூசத்தை முன்னிட்டும் அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை (Continuous Holidays) அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வருகிற 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) பொங்கல் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
அரசு விடுமுறை (Government Holiday)
பொங்கலில் முக்கிய பங்கு வகிக்கும் கரும்பு, வாழைத்தார், மஞ்சள் கொத்து, காய்கறிகள் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்று மேலும் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் திருநாளை சொந்த ஊருக்கு சென்று கொண்டாடும் வகையிலும், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருப்பதாலும் திங்கட்கிழமையை அரசு விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசின் பொதுத் துறை செயலாளர் ஜகந்நாதன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 7ம்தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், வருகிற 14ம்தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாகவும், வரும் 16ம்தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ளதாலும், 18ம்தேதி தைப்பூச திருநாள் அன்று அரசு விடுமுறை என்பதாலும், இடைபட்ட நாளான 17ம்தேதி திங்கட்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பணியாளர்கள் சங்கங்களிடம் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.
உள்ளூர் விடுமுறை (Local Holiday)
இந்த கோரிக்கையை அரசு பரிசீலித்து பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைபட்ட நாளான 17ம்தேதி (திங்கட்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதை ஈடு செய்யும் வகையில் 29ம்தேதி (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது. அதே நேரத்தில் 14ம் தேதி பொங்கல் திருநாள், மறுநாள் 15ம் தேதி (சனிக்கிழமை) திருவள்ளுவர் தினம், 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. 17ம் தேதி (திங்கட்கிழமை) தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. 18ம் தேதி தைப்பூசம் என்று தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை வந்துள்ளது.
மேலும் படிக்க
வீரரோ, காளையோ ஒரு ஜல்லிக்கட்டுப் போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதி!
இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து துறை அறிவிப்பு!