News

Sunday, 06 February 2022 10:32 PM , by: Elavarse Sivakumar

பள்ளி மாணவர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் எதிர்பாராதவிதமாக பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அளிக்க வேண்டியக் கட்டாயம் உருவாகி உள்ளது.


தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த 1 ஆம் தேதி முதல், கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, விரைவில் பாடங்களை நடத்தி முடிக்குமாறு, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் சென்னை உட்பட மாநகராட்சிகளுக்கு, வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில், 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

 5 அல்லது 4 நாள்

தேர்தல் தொடர்பான வேலைகளுக்குப் பள்ளிகள் தேவைப்படும் என்பதால், விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும், பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. தேர்தல் நடைபெற உள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம், 5 நாட்கள் அல்லது 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என உறுதியாகித் தெரிகிறது.

வரும் 19ம் தேதி சனிக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. எனவே அன்று முதல், வாக்குஎண்ணிக்கை நடைபெறும் 22ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றுக் கூறப்படுகிறது.

தேர்தலுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் 23 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...

கோழிக்கொண்டை பூ சாகுபடிக்கு மானியம் ?

ரூ.100யை எட்டிய கேரட் - வரத்து குறைவால் விலை உயர்வு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)