News

Friday, 15 July 2022 08:35 PM , by: R. Balakrishnan

5% GST on Food Items

பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து வகையான உணவு பொருட்களுக்கும் 5 சதவீதம் ஜி.எஸ்.டி, வரும் திங்கள் (ஜூலை 18 ) முதல் அமலுக்கு வருகிறது. ஜூன் 28, 29 ஆம் தேதிகளில் சண்டிகரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பேக்கிங் செய்யப்பட்ட அரிசி உள்ளிட்ட அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.

ஜிஎஸ்டி (GST)

இந்நிலையில், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது : ஜி.எஸ்.டி கவுன்சிலில் எடுத்த முடிவுகளின்படி, இதுவரை விலக்கு அளிக்கப்பட்ட முன்னரே பேக்கிங் செய்யப்பட்ட தயிர், மோர், பன்னீர் மற்றும் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு, வரும் 18 ஆம் தேதி முதல் 5 சதவீதம் ஜி.எஸ்.டி அமலுக்கு வருகிறது.

வாடிக்கையாளர்களிடம், வங்கிகள் விநியோகிக்கும் காசோலை புத்தக கட்டணத்துக்கு, 18 சதவீதம் வரி விதிக்கப்படும். மருத்துவமனைகளில் ( ஐ.சி.,யூ தவிர ) நாளொன்றுக்கு அறை

  • வாடகை ரூ.5,000க்கு மேல் வசூலிக்கப்பட்டால் இனி அதற்கும் 18 சதவீத வரி விதிக்கப்படும்.
  • எல்.இ.டி பல்புகள் உள்ளிட்ட மின் சாதனங்களுக்கு வரி, 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்கிறது.
  • ஸ்டேஷனரி பொருட்களுக்கான வரியும் 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

வரி குறையும் பொருட்கள் (Tax-deductible items)

  • தனியார் நிறுவனங்களிடம் இருந்து ராணுவ தேவைகளுக்கு கொள்முதல் செய்யப்படும், ராணுவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • ரோப் கார் பயணத்துக்கு விதிக்கப்பட்ட வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • செயற்கை கால், உபகரணங்கள் போன்றவற்றிற்கான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம், லாட்டரி, குதிரை பந்தயம் போன்றவற்றிற்கு 28 சதவீத வரி விதிப்பது தொடர்பான முடிவை, ஆகஸ்ட் மாதம் நடக்கும் ஜி.எஸ்.டி கவுன்சில் விவாதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

மேலும் படிக்க

உயர்ந்து வரும் அரிசி விலை: ஜிஎஸ்டி வரியால் மேலும் உயர வாய்ப்பு!

தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)