புரெவி புயல் (Burevi Cyclone) காரணமாக பெய்த கனத்த மழையால் தமிழகம் முழுவதும் 5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் (Paddy Crops) நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளதாக வேளாண் அமைச்சர் அன்பழகன் (Anbalhagan) தெரிவித்துள்ளார்.
பயிர் சேதம் கணக்கெடுப்பு:
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் மன்னார் வளைகுடா அருகே வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது. ஆனால் அது நகராமல் அதே இடத்தில் நிலைகொண்டதால் வட மாவட்டங்களில் கனமழை (Heavy Rain) பெய்தது. புயல், அதன்பின் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், காற்றழுத்தத் தாழ்வு பகுதி என வலுவழந்தாலும், அதே இடத்தில் இருந்ததால் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் திருவாரூர், கடலூர், நாகை போன்ற மாவட்டங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் பாதிப்படைந்த நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
5 இலட்சம் நெற்பயிர்கள் சேதம்:
தமிழக வேளாண் அமைச்சர் கே.பி. அன்பழகன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார். அதன்பின் கே.பி. அன்பழகன் கூறுகையில் ‘‘தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளனர். 1,10,344 விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். முழுமையாக ஆய்வு செய்த பின் நிவாரணம் (Relief Money) வழங்கப்படும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (CM Edappadi Palanisamy) மத்திய அரசிடம் இருந்து உரிய நிவாரணத் தொகையை பெற்றுத் தருவார்.
அடுத்தடுத்த இரு புயல்களால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை (Amount of compensation) விரைந்து வழங்க வேண்டும் என்பதே தற்போது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
உடன்பாட்டை மீறி விளைநிலங்களில் பெட்ரோலிய குழாய் பதிக்க முயற்சி! விவசாயிகள் கால்நடைகளுடன் போராட்டம்!
கடலூரில் வெள்ளத்தில் மூழ்கிய பயிர்களால் கவலையில் விவசாயிகள்! நிவாரணம் கிடைக்குமா?