கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வகையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்வது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், யாருக்கெல்லாம் இந்த நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்பது தெரியவந்துள்ளது.
நகைக்கடன் (Jewelry loan)
கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் மாநில, மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்டவைகள் குறைந்த வட்டியில் தங்க நகைகளுக்கான அடமானக் கடன்களை வழங்குகின்றன. இதன் மூலம் ஏழை, எளிய குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன.
அறிவிப்பு (Announcement)
இதனிடையே, கடந்த சட்டமன்றத் தேர்தலில்போது, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்பை சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது விதி எண் 110இன் கீழ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
குற்றச்சாட்டு (Indictment)
ஆனால், இது தொடர்பான அரசாணை வெளியிடப்படாமல் இருந்தது. மேலும், நகைக்கடன் பெறுவதில் கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றதாகவும் தமிழக அரசு குற்றம் சாட்டி வந்தது.
அரசாணை வெளியீடு (Government Publication)
இந்த நிலையில், கூட்டுறவு வங்கிகளில் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பமும் பெற்ற 5 சவரன், அதாவது 40 கிராம் வகையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்வது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தள்ளுபடி செய்யப்படும் அசல் மற்றும் வட்டித் தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்கும் எனவும், தோராயமாக சுமார் ரூ.6,000 கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
16 லட்சம் பேர் (16 lakh people)
இதன் மூலம், தமிழ்நாட்டில் தங்க நகையை அடமானம் வைத்து கடன் பெற்ற 16 லட்சம் பேர் பலனடைவர் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,கூட்டுறவு நிறுவனங்களில் குடும்ப அட்டையின்படி, ஒரு குடும்பத்தினர் 2021ஆம் மார்ச் 31ஆம் தேதி வரை 5 பவுனுக்கு உட்பட்டு தங்க நகைகளை அடமானம் வைத்து நகைக்கடன் பெற்றதில், ஒரு சில கடன்தாரர்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ தங்களது கடன்களை செலுத்தியது நீங்கலாக, நிலுவையில் இருந்த தொகை ரூ.17,114.64 கோடி.
அதன்பிறகு 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை கடன்தாரர்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ தங்களது கடன்களை செலுத்தியது மற்றும் தகுதி பெறாத தேர்வர்களை நீக்கிய பின்னர் அசல், வட்டி, அபராத வட்டி, மற்றும் இதர செலவுகள் உள்ளீட்டு தொகையாக சுமார் ரூ.6,000 கோடி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தள்ளுபடி இல்லை (No discount)
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், ஆதார் எண் அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட நகைக்கடன் (5 சவரனுக்கு மேல்) பெற்றுள்ள நபர் மற்றும் அவரது குடும்பத்தினர், எந்த பொருளும் வேண்டாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோரின் தகைக்கடன்கள் தள்ளுபடி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
விவசாயிகளுக்கு வீடு தேடி வரும் டீசல்!!
வெளிநாட்டில் வெங்காயப் பண்ணையில் வேலை - மாதம் ரூ.1 லட்சம் ரூபாய் சம்பளம்!