மதுரை மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு (Dengue mosquito eradication) பணிக்காக 5 ஆயிரம் கம்பூசியா மீன்களை (Cambodian fish) மாநகராட்சி தயார் செய்துள்ளது. நீர் நிலைகள், நன்னீர் தேங்கும் இடங்களில் விட முடிவு செய்துள்ளது.
டெங்கு பரவல் இல்லை:
மதுரையில் இதுவரை டெங்கு பரவல் இல்லை. கடைசி 5 மாதங்களில் மூவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பருவமழை (Monsoon) காலத்தில் பரவல் வேகமெடுக்கும் வாய்ப்பு அதிகம் என்பதால் தடுப்பு நவடவடிக்கையில் மாநகராட்சி களம் இறங்கியுள்ளது. வார்டு வார்டாக கொசு ஒழிப்பு பணி ஏற்கனவே துவங்கிவிட்டது. இப்பணியில் கம்பூசியா வகை மீன்களை பயன்படுத்துவதும் மாநகராட்சியின் வழக்கம். இம்மீன்களுக்கு கொசுப்புழுக்கள் தான் விருப்ப உணவு என்பதால், டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் நன்னீரில் விடுவர். இம்மீன்கள், கொசுப்புழுக்களை வேட்டையாடி அழித்துவிடும். இந்த வேட்டைக்கு 5 ஆயிரம் மீன்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மாநகராட்சி நீச்சல் குளத்திற்கு எதிர்புறமுள்ள கொசு ஒழிப்பு பிரிவில் 7 தொட்டிகளில் இவற்றை சுகாதாரத்துறையினர் வளர்த்து வருகின்றனர்.
பணித் துவக்கம்:
திறந்தவெளி நீர் தேக்க தொட்டிகள், பூங்காக்களில் (Parks) உள்ள செயற்கை நீரூற்றுகள், நன்னீர் தேங்கும் பகுதிகளில் விடும் பணி துவங்கியுள்ளது. மாநகராட்சி சுகாதார பிரிவு (Corporation Health Division) அதிகாரிகள் கூறுகையில், 'முதற்கட்டமாக 5 ஆயிரம் கம்பூசியா மீன்களை தயார் செய்துள்ளோம். தேவைக்கு தக்க இந்த எண்ணிக்கையை உயர்த்துவோம். மாநகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் எப்போதும் நீர்தேங்கும் பகுதிகள், திறந்தநிலை நீர்தேக்க தொட்டிகளில் இம்மீன்களை விடுகிறோம். பொதுமக்களும் இம்மீன்களை இலவசமாக கேட்டுப் பெறலாம் என்றனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
1 லட்சம் தேக்கு மரக்கன்றுகள் நடும் பணி! பசுமையாக்கும் திட்டத்தில் வனத்துறை ஏற்பாடு
27,500 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி! தூத்துக்குடி துறைமுகம் வந்தது!