News

Thursday, 24 September 2020 11:19 AM , by: Elavarse Sivakumar

விவசாயம் தொடர்பான மசோதாக்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், விவசாயிகளுக்கு உரமானியமாக ஆண்டிற்கு ரூ.5 ஆயிரம் வழங்கலாம் என விவசாய பொருட்கள் விலை நிர்ணய ஆணையம் (Comm­ission for Agricultural Costs and Prices (CACP))பரிந்துரை செய்துள்ளது.

மசோதாக்களுக்கு எதிர்ப்பு

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முழுஅடைப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

CACP பரிந்துரை

இந்நிலையில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆணையம், உர மானியமாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ஆண்டிற்கு 5 ஆயிரம் ரூபாய் செலுத்தலாம் என பரிந்துரை செய்துள்ளது.

இதன்படி, கரீஃப் பயிர்களுக்கு 2,500யும், ரபி பயிர்களுக்கு 2,500 ரூபாயும் வழங்கபட வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

பரிந்துரை ஏற்கப்பட்டால் (If Accepts)

  • ஒருவேளை இதனை அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், தற்போது அமலில் இருக்கும், உர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் முறை ரத்தாக வாய்ப்பு உள்ளது.

  • தற்போது யூரியா உள்ளிட்ட உரங்களை சில நிறுவனங்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் விற்பனை செய்து வருகின்றன. அவற்றுக்கு மத்தியஅரசு நேரடியாக மானியத்தொகையை செலுத்திவிடுகின்றன. இந்த நடைமுறை இனிமேல் இருக்காது.

Credit: 9 curry.com

  • இதற்கு பதிலாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் டிபிடி(Direct Benefit Transfer) மூலம், ஆண்டிற்கு 5 ஆயிரம் ரூபாய் உர மானியமாக செலுத்தப்படும்.

  • விவசாயி பயன்படுத்தும் உரத்தின் அளவை சராசரியாகக் கொண்டு இந்த மானியம் வழங்கப்படாது.

  • விவசாயிகளின் விளை நிலத்தின் சராசரி அளவைப் பொருத்து, ஓர் ஆண்டுக்கு ஒட்டுமொத்தமாக கூட்டு மானியம் கணக்கிடப்பட்டு அளிக்கப்படும்.

  • தற்போது, விவசாயி வாங்கும் யூரியாவின் விலையில் 70 சதவீதத்தை மத்திய அரசு மானிமாகக் கொடுக்கிறது.

  • இந்த ஆண்டு பட்ஜெட்டில், 71 ஆயிரத்து 309 கோடி ரூபாய் உர மானியத்திற்கு ஒதுக்கப்பட்ட போதிலும், அதில் 48 ஆயிரம் கோடி யூரியாவிற்கே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க...

தமிழகத்தில் நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை சராசரியாக இருக்கும்- TNAUவின் முன்னறிவிப்பு!

தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)