News

Saturday, 08 January 2022 09:28 AM , by: Elavarse Sivakumar

Credit : The Kitchen

இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக கிடுகிடுவென கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், பல மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தியதாலும் பல லட்சம் கோழி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.

1100 கோழிப்பண்ணைகள் (1100 poultry farms)

நாமக்கல் மண்டலத்தில் கோழிப்பண்ணை தொழில் பிரதானமாக உள்ளது. இப்பகுதியில் சுமார் 1,100 கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த முட்டைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. மேலும் அரசின் சத்துணவுத் திட்டத்துக்கும், கேரளம், கர்நாடகம், பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் முட்டைகள் அனுப்பப்படுவது வழக்கம்.

பண்டிகைகள் (Festivals)

கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு போன்றவற்றால் முட்டையின் தேவை அதிகரித்து இருந்தது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக முட்டை விற்பனை அதிகரித்து காணப்பட்டது. பிற மாநில வியாபாரிகளும் அதிக எண்ணிக்கையில் முட்டைகளைக் கொள்முதல் செய்தனர்.

அதே வேளையில் தமிழகத்தில் ஐயப்ப பக்தர்கள் விரதம், மார்கழி வழிபாடு போன்றவற்றால் முட்டை விற்பனை குறைந்து காணப்பட்டது. முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 5.05 ஆகவே நீடித்தது.

கொரோனாவால் பாதிப்பு (Damage by corona)

இந்த நிலையில் கிடுகிடுவென அதிகரித்து வரும் கொரோன வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஏதுவாக இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டன. இதன் காரணமாக, சுமார் 50 லட்சம் முட்டைகள் பண்ணைகளிலும் குளிர்பதனக் கிடங்குகளிலும் தேக்கம் அடைந்துள்ளன.

விலை நிர்ணயம் (Pricing)

இதைத் தொடர்ந்துத் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவினர் அவசரமாகக் கூடி ஆலோசனை நடத்தினர். இதில் முட்டை தேக்கம், பொது முடக்கம் அமல் ஆகியவற்றால் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என பண்ணையாளர்கள் வலிறுத்தினர். அதன் அடிப்படையில் 25 காசுகள் குறைக்கப்பட்டு கொள்முதல் விலை ரூ. 4.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. வரும் நாட்களில் பொது முடக்கம் கடுமையாகும் பட்சத்தில் முட்டை விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

கறிக்கோழி

இதேபோல கறிக்கோழி விற்பனையும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கிலோ ரூ.97-க்கு விற்பனையான கறிக்கோழி தற்போது ரூ.84-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ. 13 விலை குறைந்துள்ளதால் விற்பனையாளர்களுக்கு வாரந்தோறும் ரூ.150 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

மேலும் படிக்க...

சிறந்த வணிக யோசனை 2022: வருமானத்தை இரட்டிப்பாக்கும் 6 கால்நடை வளர்ப்பு தொழில்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)