புதிய 50 ரூபாய் நோட்டில் காந்தி படத்திற்கு மேல், கறுப்பு நிற மை அச்சு பதிவான நோட்டு தொடர்பாக, வாடிக்கையாளர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
50 ரூபாய் நோட்டு (50 Rupees Note)
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த சம்பத் என்பவர் கூறியதாவது: சில தினங்களுக்கு முன் தனியார் வங்கியில், 50 ரூபாய் நோட்டு புதிய கட்டு ஒன்று வாங்கினேன். அதில், ஒரு நோட்டில், காந்தியின் படத்திற்கு மேல் கறுப்பு நிற மை அச்சாகி இருந்தது. இதேபோல, காந்தியின் படத்திற்கு கீழ், ரூபாய் நோட்டின் குறியீடு இருந்தது. இதுபோல ஏற்கனவே ஒரு 10 ரூபாய் நோட்டு, என்னிடம் வந்துள்ளது. தற்போது, 50 ரூபாய் நோட்டு கிடைத்துள்ளது. இந்த நோட்டுக்களை பத்திரப்படுத்தி வைத்துள்ளேன் என்று அவர் கூறினார்.
இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறும்போது, 'ரிசர்வ் வங்கி அச்சிடும் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுக்களில், சில நோட்டுகள் இதுபோன்ற பிழையுடன் வருகின்றன. இது தவிர்க்க முடியாதது. அவ்வாறு பெறும் நோட்டுக்களை, சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்' என்றனர்.
மேலும் படிக்க
கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி அதிரடி!