தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் முடிக்கப்பட்டுள்ள நலத்திட்டங்களை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
அதன்படி, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நிறைவடைந்துள்ள கொடிவேரி உள்ளிட்ட இரண்டு கூட்டு குடிநீர் திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டன. திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள மீன் சந்தையை மேம்படுத்தும் பணிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இரண்டு உணர்வு பூங்காக்கள் உள்ளிட்டவற்றையும், மணலி பகுதியில் கட்டப்பட்டுள்ள 2 புதிய பாலங்கள், விரிவான கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் அடர்வனக்காடுகள் உள்ளிட்ட திட்டங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இறுதியாக பல்வேறு அரசு துறைகளில் பணியின் போது உயிரிழந்த 126 பேரின் வாரிசு தாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அப்போது, அமைச்சர் கே.என்.நேரு, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும் படிக்க
வேகமாகப் பரவும் தக்காளி காய்ச்சல், 80 குழந்தைகளுக்கு பாதிப்பு