
இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி இந்தியாவில் 5ஜி ஏலம் நடந்தது. ஆயுதப் படைகளில் 5ஜி சேவையை நடைமுறைப்படுத்துவது குறித்த சமீபத்திய ஆய்வில் ராணுவம் முன்னணி சேவையாக இருந்தது. இதையடுத்து அதன் பரிந்துரைகளை முப்படைகளும் ஆய்வு செய்து வருகின்றன.
5G சேவை (5G Service)
எல்லைப்பகுதியில் உள்ள முன்கள ராணுவ வீரர்களின் தகவல் தொடர்பை அதிகரிக்க, 5ஜி சேவையை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் இந்த மாதத்திலேயே 5ஜி சேவையை அளிக்கும் என தெரிவித்துள்ளது. இதைப்போலவே, ஜியோ நிறுவனம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 5ஜி சேவையைத் தொடங்கும் என அறிவித்துள்ளது.
ஆக மொத்தம், ஆகஸ்ட் மாதத்தில் 5ஜி சேவையானது உறுதியாகியுள்ளது. இதனால், இந்திய இராணுவ வீரர்களுக்கு 5ஜி சேவை வழங்கப்படும் என பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க
ஜியோ 5G சேவை ஆகஸ்ட் 15 இல் தொடக்கம்: உயருமா 4G சேவைக் கட்டணம்!