தொலைதொடர்புத் துறை இப்போது '4ஜி' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 'மொபைல் போன்' இணைப்புகளை வழங்கி வருகிறது. இதைவிட அதிவேகமான '5ஜி' தொழில்நுட்பம் வெளிநாடுகளில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.
5ஜி டெக்னாலஜி (5G Technology)
இந்தியாவில் இந்த தொழில்நுட்பத்தை துவக்க, தற்போது தான் 5ஜிக்கான அலைக்கற்றை ஏலம் நடந்துள்ளது. மேலும் 5ஜி தொழில்நுட்பம் வந்துவிட்டால் மொபைல்போனில் அதிவிரைவாக 'டேட்டா'க்களை 'டவுன்லோடு' செய்யலாம்.
'டிவி'யே வேண்டாம்; சினிமா உட்பட அனைத்து விஷயங்களையும் மொபைல்போனில் தங்கு தடையின்றி பார்க்கலாம்; பல சேவைகளை பெறலாம்.இந்த 5ஜி தொழில்நுட்பத்தை, வரும் டிசம்பர் 25ம் தேதி, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினத்தின் போது துவக்கி வைக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை, பெங்களூரு உட்பட சில மாநகரங்களில் 5ஜி இணைப்பு டிசம்பரில் துவக்கப்பட உள்ளதாம். அடுத்த ஆண்டு இறுதிக்குள் மற்ற நகரங்களிலும் இந்த இணைப்பு கிடைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம். வரும் 2024 லோக்சபா தேர்தலின் போது அனைத்து இடங்களிலும் 5ஜி தொழில்நுட்பம் இருக்க வேண்டும் என மோடி விரும்புகிறாராம். இதை தேர்தல் பிரசாரமாக்கவும் பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
மேலும் படிக்க
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: இனி கன்ஃபார்ம் டிக்கெட் ஈஸியா கிடைக்கும்!
ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு: ஆகஸ்ட் 1 இல் முக்கிய ஆலோசனை!