கொரோனா பெருந்தொற்று இன்னும் 6 மாதங்களில் இந்தியாவில் முடிவுக்கு வரத்தொடங்கும் என தேசிய நோய்த் தடுப்புத்துறை மையத்தின் இயக்குநர் சுர்ஜீத் சிங் தெரிவித்தார்.
புரட்டி எடுத்தக் கொரோனா (Corona to take the revolution)
உலக நாடுகளைப் புரட்டி எடுத்தக் கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவின் பல மாநிலங்களிலும், கொரோனா வைரஸ், தனது கோராத்தாண்டவத்தை ஆடி வருகிறது.
3ம் அலை அச்சம் (3rd wave fear)
2ம் அலையால் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ள மக்கள், குழந்தைகளைக் குறிவைக்கும் 3ம் அலை குறித்து அதிகம் கவலைப்படுகிறார்கள். இந்நிலையில் கொரோனா இன்னும் 6 மாதங்களுக்கு ஆட்டம் காட்டும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இது குறித்து தேசிய நோய்த் தடுப்புத்துறை மைய இயக்குநர் சுர்ஜீத் சிங் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கொரோனா சாதாரண தொற்று நோய்களில் ஒன்று போல ஆகி எளிதாக நிர்வகிக்க கூடிய ஒன்றாகிவிடும். இதுதான் ஒரு பெருந்தொற்று முடிவதன் தொடக்க நிலை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தந்து எளிதாக குணமாக்கும் நிலை ஏற்படும்.
50 கோடி பேர் (50 crore people)
தற்போது இந்தியாவில் 75 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள நிலையில் குறைந்தது 50 கோடி பேராவது தொற்று எதிர்ப்பாற்றலை பெற்று விட்டது ஆறுதல் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மகிழ்ச்சி செய்தி (Happy news)
அதனால் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் நோய் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்னும் 6 மாதங்களில் கொரோனா குறையத் தொடங்கும் என்பது மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க...
இன்று மெகா தடுப்பூசி முகாம்; தமிழகத்தில் 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டம்!
வருமான வரி தாக்கல் செய்வதில் தொடரும் சிக்கல்: காலக்கெடு நீட்டிப்பு!