இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 11 May, 2023 9:44 AM IST
6 percent salary hike for TANGEDCO employees in Tamilnadu

ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் 01.12.2019-ஆம் நாளன்று பெறும் ஊதியத்தில் ஆறு சதவிகிதம் (6%) ஊதிய உயர்வும், 01.12.2019–ஆம் நாளன்று, 10 வருடங்கள் பணி முடித்தவர்களுக்கு பணி பலனாக (Service Weightage) 01.12.2019-ஆம் நாளன்று பெறும் ஊதியத்தில் 3% ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 01.12.2019 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு குறித்து தொழிற்சங்கங்கள், பொறியாளர் கழகம் மற்றும் பொறியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (10.05.2023) சென்னை தலைமை அலுவலகத்தில் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.

இறுதி கட்ட பேச்சு வார்த்தையில் சுமூக முடிவில் ஊதிய உயர்வு குறித்து சுமூக முடிவு எடுக்கப்பட்டது. இதன் பின்னர், பத்திரிக்கையாளர்களை சந்தித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தவை பின்வருமாறு-

01.12.2019 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கான குழு கடந்த ஆட்சியில் 07.12.2019-ல் தான் அமைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த கூட்டம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று இன்றோடு 8 முறை தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி இன்று சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் 01.12.2019-ஆம் நாளன்று பெறும் ஊதியத்தில் ஆறு சதவிகிதம் (6%) ஊதிய உயர்வு வழங்கப்படும். 01.12.2019–ஆம் நாளன்று, 10 வருடங்கள் பணி முடித்த ஊழியர்களுக்கும் மற்றும் அலுவலர்களுக்கும் பணி பலனாக (Service Weightage) 01.12.2019-ஆம் நாளன்று பெறும் ஊதியத்தில் 3 சதவிகிதம் (3%) ஊதிய உயர்வு.

ஊதிய உயர்வின் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டு ஒன்றிற்கு ரூ.527.08/- கோடி கூடுதல் செலவாகும். இவ்வூதிய உயர்வு மூலம் ஏற்படும் நிலுவைத் தொகை 01.12.2019-ம் நாள் முதல் கருத்தியலாகக் (Notional) கணக்கிட்டு 01.04.2022-ம் நாள் முதல் பணப் பலன்கள் வழங்கவும், 01.04.2022 முதல் 31.05.2023 வரை வழங்கப்படவேண்டிய நிலுவை தொகையினை இரண்டு தவணைகளாக வழங்கவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த நிலுவைத் தொகை ரூ.516.71/- கோடி.

மேலும் 01.12.2019 முதல் 31.03.2022 வரையிலான 28 மாதத்திற்கான நிலுவைத் தொகையில் ஒவ்வொரு பணியாளருக்கும் குறைந்தபட்சம் தொகுக்கப்பட்ட நிலுவைத் தொகையாக ரூ.500/- வீதம் கணக்கிட்டு இந்நிலுவைத் தொகையினை மேற்குறிப்பிட்டவாறு இரு தவணைகளாக வழங்கப்படும். இதற்காக ரூ.106 கோடி கூடுதல் செலவாகும். ஊதிய உயர்வின் மூலம் பயன்பெறும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் எண்ணிக்கை 75,978.

10 வருடங்கள் பணி முடித்த ஊழியர்களுக்கும் மற்றும் அலுவலர்களுக்கும் பணி பலனாக (Service Weightage) 3 சதவிகிதம் (3%) ஊதிய உயர்வு மூலம் பயன்பெறும் பணியாளர்களின் எண்ணிக்கை 62,548.

வேலைப்பளு குறித்த ஒப்பந்தம் தொழிற்ச்சங்கங்களுடன் பின்னர் பேசி முடிவு எடுக்கப்படும்.மேற்காணும் முடிவினை அனைத்து தொழிற்சங்கங்களும் மனமகிழ்ச்சியுடன் ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர் என அமைச்சர் தெரிவித்தார்.

pic courtesy: DT/ minister profile

மேலும் காண்க:

ஒரு மாம்பழத்தின் விலை 19,000 ரூபாய்- எங்க? ஏன் இவ்வளவு விலை?

English Summary: 6 percent salary hike for TANGEDCO employees in Tamilnadu
Published on: 11 May 2023, 09:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now