News

Wednesday, 10 April 2019 01:38 PM

இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது. எதிர்க்கட்சிகள் மட்டுமே  நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது முன்னாள் அரசு அதிகாரிகளும் அவர்களுடன் கரம் கோர்த்து ஆணையத்திற்கு எதிராக வினா எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் மட்டுமல்லாது பிற மாநில தலைவர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கூறும்போது "தேர்தல் ஆணையத்தின பணி தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதாகும். சமீபகாலமாக  ஆணையம் மத்தியில் ஆளும் பா..,வை சமாதானபடுத்தும் வகையில் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது" என் கூறியுள்ளார்.

ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் அவர்கள் கூறியதாவது, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள், மற்றும் செயல்பாடு  இவை அனைத்தும்  மத்தியில் ஆளும் பாஜகவுக்குச் சாதகமாகவும்மற்றும் சலுகைகள் காட்டப்படுவதாகவும் கூறி, கடிதமொன்றை எழுதி அனுப்பியுள்ளனர்.

66 அரசு அதிகாரிகள் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். முன்னாள் வெளியுறவு செயலர், முன்னாள் தலைமை அதிகாரிமுன்னாள் நிர்வாக இயக்குனர், முன்னாள் திட்ட கமிஷன் செயலர் என அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைத்து, கடிதம் எழுதியுள்ளனர். பல்வேறு நடத்தைகளை சுட்டிக்காட்டி, பின்  " மிஷன் சக்தி" தொடர்பாக பிரதமர் கூறிய கருத்து நேரிடை தேர்தல் விதிமீறல் என்றே அனைத்து தரப்பினரும் கூறி உள்ளனர்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)