பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 7 September, 2022 10:16 PM IST
திருப்பத்தூர் அருகே 6ம் வகுப்பு படிக்கும் மாணவன் இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் பெற்றோரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. மழைக்காலம் வரப்போகிறது என்பது மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி பலியாவது தொடர்கதையாகி வருகிறது. இத்தகைய விபத்துகள் தடுக்கப்பட வேண்டிய, தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

6ம் வகுப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலை நெல்லிவாசல் நாடு பகுதியை சேர்ந்தவர் வேடி, இவரது மகன் சிவா.11 வயதான இந்த சிறுவனின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர். இதனால் மேல்பட்டு கிராமத்தில் உள்ள தனது தாய் மாமா வெங்கடாசலம் அரவணைப்பில் இருந்து வந்தார். மேலும் சிறுவன் சிவா அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.

இடி மின்னல் தாக்கி

இந்நிலையில் நேற்று இரவு சிவா வீட்டின் ஒர் அறையில் துாங்கிக் கொண்டிருந்தான். அப்பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது சிவா துாங்கிக் கொண்டிருந்த அறையின் மேற் கூரை மீது பயங்கர சத்தத்துடன் இடி தாக்கியதில் சிவா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இது குறித்து வெங்கடாசலம் கொடுத்தவர் புகாரின் பேரில், திருப்பத்துார் கிராமிய போலீசார் அங்கு சென்று இடித்தாகி இறந்த சிவாவின் உடலை மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடி தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க...

4 வயது குழந்தைகள் வேலைக்குத் தேவை - வித்தியாசமான விளம்பரம்!

பிள்ளையாருக்கு ரூ.316 கோடிக்கு காப்பீடு!

English Summary: 6th standard school student killed by lightning!
Published on: 07 September 2022, 10:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now