மக்களுக்கு உதவும் வகையில் நலத்திட்டங்களை அரசு அமல்படுத்தினாலும், அத்துமீறி, விதிகளைத் தவிடுபொடியாக்கி, அரசாங்கக் காசை அடிக்க வேண்டும் என்று சிலர் முயற்சி மேற்கொள்கின்றனர். அவர்களின் ஆசை சில சமயங்களில் நிறைவேறிவிடுகிறது. ஆனால் அரசன் அன்று கேட்பான் என்பதற்கு இணங்க, விசாரணை நடத்தும் நிலை எப்போதாவது உருவாகத்தான் செய்கிறது. அப்படியொரு, முதியோர் ஓய்வூதிய மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு மத்திய, மாநில அரசின் முதியோர் ஒய்வூதிய திட்டத்தில் பயன்பெறுகின்றனர். வசதிபடைத்த பலரும் அரசுக்கு தவறான தகவல்களை தெரிவித்து பயன்பெற்று வருகின்றனர். தற்போது ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி கூட்டுறவு வேளாண் வங்கிகள், தேசிய வங்கிகளிலும் நகை அடகு வைத்து அதனை திருப்பி உள்ளனர்.
உதவி தொகை
உஜ்வாலா திட்டத்தில் இரண்டு கேஸ் சிலிண்டர் பெற்று பயனடைகின்றனர். பத்திரப்பதிவுத்துறை ஆவணங்களில் முதியோர் உதவி தொகை பெறுவோர் சொத்துக்கள் வாங்கியும், விற்றும் உள்ளது தெரியவந்துள்ளது.
ஆய்வு செய்யப் பரிந்துரை
இதுபோன்று விதிமீறி வசதி படைத்தவர்கள் முதியோர் உதவி தொகை பெறுகின்றனர். ஆதார் விபரங்களை ஒருங்கிணைத்து அந்த விபரங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தமிழக அரசுக்கு அனுப்பி ஆய்வு செய்ய பரிந்துரைத்தது.
7700 பயனாளிகள்
இதன்படி தேனி மாவட்டத்தில் 7700 பயனாளிகள் விதிமீறி பயன் பெறுவது கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் தலா 1500 பேர் முறைகேடாக பயன்பெற்று வருகின்றனர். இதனால் ஒவ்வொறு தாலுகாவில் உதவி ஆணையர் (கலால்), தாலுகா வழங்கல் அலுவலர், வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்த குழுக்களை அமைத்து நேரடியாக ஆய்வு செய்து, ஜூலை 25க்குள் அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
அதேநேரத்தில் பயன்பெற்றோருக்கு ஆதரவு அளித்து ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...