30க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் உறுதியான நிலையில், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் 7 நாட்கள் தனிமையில் இருப்பது கட்டாயம் என அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரேனா ஒரு காலம் நம்மைப் பாடாய் படுத்திய நிலையில், தற்போது ஒமிக்ரான் வைரஸ் தன் பங்குக்கு ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது.
400க்கும் மேல் (More than 400)
இம்மாதத்தின் தொடக்கத்தில் இந்தியாவில் நுழைந்த ஒமைக்ரான்,
அடுத்தடுத்து 17 மாநிலங்களில் கால் பதித்துவிட்டது. அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த வைரஸ் பரவல் திடீரென வேகம் எடுத்துள்ளது. இதுவரை 415 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
34 பேருக்கு (For 34 people)
இதையடுத்து பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியானது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
சென்னை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சந்தித்து, நலம் விசாரித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை (R.D.P.C.R. Experiment)
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் குறிப்பிட்ட 12 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே 100 சதவீதம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்படுகிறது. மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களில் உத்தேசமாக 2 சதவீதம் பேருக்குத்தான் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட 12 நாடுகளை தவிர, ஒமிக்ரான் தொற்று இல்லாத நாடுகளில் இருந்து வந்தவர்களில் பலருக்கு மரபியல் மாற்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
பரிசோதனை (Experiment)
அவர்களில்தான் பலருக்கு ஒமிக்ரான் தொற்றும் ஏற்பட்டது. கடந்த சில நாட்களில் தமிழகம் திருமபிய 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 39 பேருக்கு ஒமிக்ரானுக்கு முந்தைய மரபியல் மாற்ற அறிகுறி உறுதியாகி உள்ளது. அவர்களுடைய மாதிரிகள் பெங்களூர் மற்றும் புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் 5 நாட்களுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு சென்று புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கேட்டு ஏற்கனவே கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. ஆனால் இதுவரை பதில் வரவில்லை.
புதிய நெறிமுறைகள் (New protocols)
-
எனவே நாளை முதல் தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துகிறது.
-
அதன் படி ஒமைக்ரான் ஆபத்து குறைவாக உள்ள நாடுகள் உள்பட அனைத்து வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் தங்கள் வீடுகளில் 7 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
-
8-வது நாள் மீண்டும் பரிசோதனை செய்யப்படும். அப்போது தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால்தான் வெளியே நடமாட அனுமதிக்கப்படுவார்கள்.
-
ஒமைக்ரான் தொற்று குறைவான ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களில் நாளை முதல் 10 சதவீதம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
-
ஒமிக்ரான் நெருக்கடியான இந்த சூழலில் புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடி மகிழவேண்டியது அவசியம்தான்.
-
இருப்பினும், ஆபத்து இல்லாமல் கொண்டாட வேண்டியது அதைவிட அவசியம்.
-
எனவே பண்டிகைக் கொண்டாட்டங்களை வீடுகளிலேயே கொண்டாடுங்கள்.
கொண்டாட்டங்களுக்குத் தடை (Ban on celebrations)
-
இந்த ஆண்டு ஒமிக்ரான் அச்சுறுத்தலால் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்பதை அரசு வேண்டுகோளாக வைக்கிறது.
-
கூட்டமாகப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை பொதுமக்களும் தவிர்க்க வேண்டும்.
-
நட்சத்திர ஓட்டல் மற்றும் பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு நிகழ்ச்சிகளை யாரும் நடத்தக்கூடாது.
-
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக வெளி மாநிலங்களுக்கும் யாரும் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
-
இதுபோன்ற வழிமுறைகளை அனைவரும் பின்பற்றி ஒமைக்ரான் பரவலை தடுக்க ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
ஓமிக்ரான் தாக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்: WHO எச்சரிக்கை!