News

Wednesday, 07 July 2021 03:07 PM , by: T. Vigneshwaran

heavy rainfall in tamilnadu

குமரிக் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, வேலூர் , ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர்,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை நெருங்கிய நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன்  மிதமான மழையும் காரைக்கால் பகுதிகளின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரவிற்கும் 9ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரத்தின் காரணமாக வருகின்ற 10 மற்றும் 11-ம் தேதி நீலகிரி , தேனி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய கனமழை திண்டுக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் இடியுடன் கன மழையும், திருவள்ளூர் , ராணிப்பேட்டை, சென்னை மாவட்டங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய கூடும்.

நீலகிரி,தேனி மற்றும்  கோவை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மலைப் பகுதிகளில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மழை ஏற்றத்தை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. சென்னை நிலவரத்தைபார்த்தால் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் தெரிய வாய்ப்புள்ளது. நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் 11ம் தேதி வரை குமரி கடல் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள  தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் மேற்கு வங்கக்கடலை ஒட்டி ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு  50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பது தகவல்.

இதுமட்டுமல்லாமல், தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா ,கர்நாடகா கடலோரப் பகுதிகள் ,லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் . தென் மேற்கு மத்திய தரைக்கடல் பகுதியில் காற்று மணிக்கு 40 -50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

பள்ளி கல்வி துறையின் புதிய உத்தரவு - ஆணையர்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முதுகலைக் கல்லூரிகள் மீண்டும் திறப்பு!

தொழில் முனைவோர் மாதிரி திட்டத்தின் மூலம் மீன்வளம்-நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)