மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 May, 2019 1:02 PM IST

ஏழு கட்டங்களாக நடந்த மக்களவை தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. நிறைவு பெற்ற ஏழாம் கட்ட தேர்தலில் 62 % வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்குகள் என்னும் பணி மே 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று மாலை அளவில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

மக்களவை தேர்தலானது கடந்த மாதம் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 தேதி  (நேற்று) வரை நடை பெற்றது. மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடந்து வந்தது. இந்த தேர்தலில் 10 கோடி  புதிய வாக்காளர்கள் சேர்க்க பட்டுள்ளனர். 

ஏழாம் கட்ட தேர்தலானது பஞ்சாப் (13/13), சண்டிகர் (1/1), மத்திய பிரதேசம் (8/29), ஜார்கண்ட் (3/14), மேற்கு வங்கம் (9/42), உத்திர பிரதேசம் (13/80), பீகார் (8/40), மற்றும் ஹிமாச்சல் பிரதேசம்(4/4), போன்ற தொகுதிகளுக்கு நடைபெற்றது.

59 தொகுதிகளில் 918 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 10 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக இருந்தனர். இதில் 3,435 பேர் மூன்றாம் பாலினத்தவராவர்.

இறுதி கட்ட வாக்கு பதிவு நடைபெற்ற தொகுதிகளில் பிரதமர் போட்டியிடும் வாரணாசி தொகுதியும் ஒன்று என்பது குறிப்பிட தக்கது. நேற்று மாலை வரை 62% வாக்குகள் பதிவாகி இருந்தன என தேர்தல் அதிகாரி கூறினார். வாக்கு இயந்திரங்கள் வாக்குகள் என்னும் மையத்திற்கு எடுத்து செல்லபட்டு வரும் மே 23 தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்க படும் என்றார்.

நேற்று மாலை முதல் தொலைக்காட்சிகள், ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் கருத்து கணிப்புகளை வெளியீட்டு வருகின்றன. பெரும்பாலான  ஊடகங்களின் கருத்து கணிப்புகள்,  மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு சாதகமாகவே உள்ளது.

பாஜக அரசு பலத்த பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என தகவல்கள் வருகின்றன. கருத்து கணிப்புகள் யாவும் எதிர் கட்சிகளுக்கு எதிராகவே உள்ளன. எனினும் மே 23 தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Anitha Jegadeesan

English Summary: 7 Phase Of Lok Sabha Election: 62% Of Voter Participated: Modi Come Back With Majority, Saying Exit Polls
Published on: 20 May 2019, 01:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now