அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவித்ததற்கு இணங்க, பிரதமர் நரேந்திர மோடி 38 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பல்வேறு நிலைகளில் பணியமர்த்தப்பட்ட 75,000 பேருக்கு அக்டோபர் 22 சனிக்கிழமையன்று பணி நியமனக் ஆணைகளை வழங்குகிறார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தீபாவளிக்கு சில நாட்கள் முன்னதாக நடைபெற உள்ளது.
ரோஸ்கர் மேளா (வேலைவாய்ப்பு கண்காட்சி) என்று அழைக்கப்படும் விழாவில் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இயக்கத்தை தொடங்கி வைப்பார் என்று பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் குடிமக்களின் நலனை உறுதி செய்வதற்கும் பிரதமரின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும்” என்று பிரதமர் அலுவலக அறிக்கை கூறியது. அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் தற்போதுள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் “மிஷன் முறையில்” நிரப்புவதற்கு அரசாங்கம் செயல்பட்டு வருகிறது, என்றும் அறிக்கை கூறுகிறது.
புதிய பணியாளர்கள் குரூப் ஏ மற்றும் பி (கெசட்டட்), குரூப் பி (நான் – கெசட்டட்) மற்றும் குரூப் சி என பல்வேறு நிலைகளில் பணியமர்த்தப்படுவார்கள். மத்திய ஆயுதப்படை பணியாளர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள்கள், கீழ்நிலை பிரிவு எழுத்தர்கள் (LDC), ஸ்டெனோ, தனிப்பட்ட உதவியாளர்கள் (PA), வருமான வரி ஆய்வாளர்கள் மற்றும் பல்பணி ஊழியர்கள் (MTS) ஆகிய பணியிடங்களிலும் புதிய பணி நியமனம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தந்த அமைச்சகங்கள் தாங்களாகவோ அல்லது மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC), அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மற்றும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலமாகவோ ஆட்சேர்ப்புகளை மேற்கொள்கின்றன.
இந்த ஆண்டு ஜூன் மாதம் 10 லட்சம் அரசு வேலைகள் வழங்கும் முடிவை பிரதமர் அறிவித்தார். 2024ல் தேசிய ஜனநாயக அரசாங்கம் மூன்றாவது முறையாக பதவியேற்க முற்படுவதற்கு முன், “வேலையில்லா திண்டாட்டம்” குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகளிடம் இருந்து அகற்றுவதற்கான ஒரு வழியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் இளைஞர்களுக்கான (15-29 வயதுக்குட்பட்ட) வேலையின்மை விகிதம் 20-க்கும் அதிகமாக உள்ளது. கடந்த பல காலாண்டுகளில் இந்த சதவீதம் வேலைகள் இல்லாமை எனக் கூறப்படும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தீனி அளிக்கிறது. ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’வில் காங்கிரஸ் முன்னிலைப்படுத்திய விஷயங்களில் வேலையின்மையும் ஒன்று.
மேலும் படிக்க: