News

Wednesday, 16 February 2022 05:54 PM , by: T. Vigneshwaran

7th pay commission

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நிம்மதி தர கூடிய செய்தி கூடிவரும். ஊழியர்களின் 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகைகள் குறித்த எதிர்பார்ப்புகள இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. அதனால் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் இது குறித்த விவாதம் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகைக்கான ஒப்புதல் கிடைத்த பிறகு, ஊழியர்களின் கணக்கில் வரக்கூடும் தொகை என்னவாக என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி

அதனை தொடர்ந்து 7 வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு, ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படியோடு, கூடுதலாக இன்னும் பல நன்மைகளை வழங்கியுள்ளது என்றே கூறலாம். அகவிலைப்படி நிலுவை தொடர்பாக 18 மாதங்களாக முடிவு எடுக்கப்படவில்லை. ஜாயிண்ட் கன்சல்டேடிவ் மெஷினரியின் தேசிய கவுன்சிலின் (ஜேசிஎம்) செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா கூறியதாவது, அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்ட  அதே வேளையில், 18 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி (Dearness Allowance) பாக்கிகளை ஒரே தடவையில் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கவுன்சில் அரசாங்கத்தின் முன் வைத்துள்ளது என்று கூறினார்.

ஜே.சி.எம். தேசிய கவுன்சில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) நிதி அமைச்சகத்திற்கு இடையே நிலுவைத் தொகை குறித்த விவாதம் தொடங்கியது. அப்போதும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. இருப்பினும் ஊழியர்கள் தங்களது கோரிக்கையில் தற்போது வரை உறுதியாக உள்ளனர். அரசுடன் இது தொடர்பான பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது. மேலும் விரைவில் இது குறித்த பேச்சுவார்த்தை அமைச்சரவை செயலாளருடன் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செலவினத் துறை வெளியிட்ட ஆண்டு அறிக்கையில், நாட்டில் மொத்தம் 48 லட்சம் மத்திய ஊழியர்களும், சுமார் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இருப்பதாக கூறப்பட்டது.

அரியர் தொகை

JCM இன் தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ராவின் கூறியதாவது, லெவல்-1 ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ. 37,554 ஆக இருக்கும். லெவல்-13 (7வது CPC அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900) அல்லது லெவல்-14 (ஊதிய அளவு) ஆகியவற்றை கணக்கீடு செய்கையில், இந்த ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை ரூ. 1,44,200 முதல் ரூ. 2,18,200 வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

தங்கம் விலை: 8 மாத உச்சத்தில் இருந்து சரிவு! நிபுணர்களின் கணிப்பு என்ன?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)